"பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
பதிவு : பிப்ரவரி 16, 2019, 12:05 AM
ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
தாக்குதல் குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை அடியோடு வேரறுப்போம் என கூறினார்.  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என அந்தந்த மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறினார்.  தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனங்களில் வரும் போது, பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும், சிரமங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.