துரைமுருகன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
பதிவு : பிப்ரவரி 14, 2019, 04:01 PM
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது, வரவு செலவு விவரங்கள், கடன் அளவுகள் குறித்து திமுக மற்றும் அதிமுக ஆட்சி செயல்பாடுகள் குறித்து ஒப்பீடு செய்து பேசினார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது, வரவு செலவு விவரங்கள், கடன் அளவுகள் குறித்து திமுக மற்றும் அதிமுக ஆட்சி செயல்பாடுகள் குறித்து ஒப்பீடு செய்து பேசினார். அப்போது, புள்ளி விவரங்களை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பதாக கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய துரைமுருகன், தாம் கூர்ந்து கவனிக்கவில்லை என்றும், தங்களது ஆட்சியை பற்றி  நிதித்துறை செயலாளர் எழுதி கொடுத்தது போன்றே அதிமுக ஆட்சியிலும் எழுதி கொடுத்திருப்பதாக கூறினார். சபையின் அலுவல் எப்போது முடியும் என எதிர்ப்பார்த்து கொண்டிருப்பதாக கூறினார். துரைமுருகன் கூறியதை கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.