ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2019, 05:53 PM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
விதிமீறல் பேனர்களை  தடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு, அரசியல் கட்சியினர்  சாலைகளில் பேனர் வைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும், நிர்மல்குமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிப் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்க அனுமதி கோரி அதிமுக முன்னாள் எம்.பி. பாலகங்கா மனுத்தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த நீதிபதிகள், அதிமுக வைக்கும் பேனர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிமன்ற உத்தரவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லை கூறிய நீதிபதிகள், புதிதாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

921 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3384 views

பிற செய்திகள்

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு : திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் மீது புகார்

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், தனது மனைவி பெயருக்கு மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது

4 views

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

21 views

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

47 views

அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் வருமானவரித்துறை சோதனை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

37 views

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

விஜயகாந்துடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு திமுக கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் செய்துள்ளார்.

32 views

திமுக உடன் தொகுதி பங்கீட்டிற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - ஜவாஹிருல்லா

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.