புழல் சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை - காவல் உயரதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு புகார்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 05:17 PM
மாற்றம் : பிப்ரவரி 13, 2019, 05:48 PM
சென்னை புழல் சிறையில், பணம், அதிகாரம் படைத்த கைதிகள் சிறப்பு சலுகைகளில் திளைப்பதாக, போலீசார் டிஜிபியிடம் புகாரளித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
போலீசார் அளித்துள்ள புகாரில், விதிகளுக்கு புறம்பாக, ல​ஞ்சம் பெற்றுக்கொண்டு உயரதிகாரிகள் துணையுடன் வசதி சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள், கொலைக் கைதிகள், பிரபல ரவுடிகள் ஆகியோருக்கு, உயர்தர வெளி உணவுகள் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு விதமான போதைப் பொருட்கள் அவர்களுக்கு கிடைப்பதாகவும், செல்போன் போன்ற வசதிகளுக்கு பஞ்சமே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளிடம் புகார் கூறிய பின்பு, கைதிகள், தங்களை வசப்படுத்த முயற்சிப்பதாகவும், மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கூறியுள்ள போலீசார், உயரதிகாரிகள் தங்களுக்கு பணி மற்றும் விடுப்பு ஒதுக்குவதில் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், புகார் குறித்து தனியாக விசாரித்தால் ஆதாரங்கள் பலவற்றை அளிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

585 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3288 views

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

184 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

52 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

37 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.