கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 11:09 AM
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி, மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இதில் கருப்பசாமியும், முருகனும் ஜாமின் கோரி விண்ணப்பித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி ரோஹிந்தன் பாலி நரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு ஏற்கனவே வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இவர்களை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது 2 பேருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.