தம்பிதுரை கருத்தில் தவறு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்
பதிவு : பிப்ரவரி 12, 2019, 03:47 PM
நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விமர்சித்து அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசியது சட்டப்பேரவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.
* பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, ஜி.எஸ்.டியால் சிறுகுறு தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக  நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். 

* மேலும் மத்திய அரசை விமர்சித்த தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது அதிமுகவின் கருத்தா என்பதை விளக்க வேண்டும் எனவும் பொன்முடி கேள்வி எழுப்பினார். 

* அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜி.எஸ்.டி.யில் திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று பேசிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றார்.

* அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தம்பிதுரையின் கருத்து அவரின் சொந்த கருத்தா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தா என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.

* அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு எதிராக வரும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசின் கடமை என்றார். மேலும் தம்பிதுரை பேசியதில் தவறு என்ன இருக்கிறது என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

635 views

"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை" - தங்க தமிழ்ச்செல்வன்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் விசாரணை 3 மாதத்திலேயே முடிவடைந்திருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

117 views

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - தம்பிதுரை

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

584 views

பிற செய்திகள்

இதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...

பா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

86 views

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

64 views

அதிமுக கூட்டணி - சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி - கருணாஸ்

அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

116 views

"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

90 views

காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

27 views

வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.