திருப்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 05:44 PM
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எண்ணூரில் பி.பி.சி.எல். 
கடலோர முனையம் மணலியில் சி.பி.சி.எல்.கச்சா எண்ணெய் குழாய் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை, திருச்சி விமான நிலையங்களில் விரிவாக பணிகளுக்கான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

பிரதமர் நரேந்திரமோடியின் பேச்சு
காமராஜரை போல் ஊழலற்ற ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் தனது பேச்சை தமிழில் துவக்கினார். அதனைதொடர்ந்து பேசிய அவர் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் திட்டம் சிறந்த திட்டமாகும் என்றும் 'ஒரு பதவி ஒரு பென்ஷன்' திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார். இந்தியாவுக்கு தேவையான அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தேசிய பாதுகாப்புத்துறையின் அணுகுமுறை வித்தியாசமானது என்று பிரதமர் கூறினார். பாகிஸ்தான் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை காங்கிரஸ் கொச்சைப்படுத்தியதாக குற்றம் சாட்டிய அவர், மோடியை வசைபாடுவதையே பிழைப்பாக கொண்டுள்ளதாக எதிர்கட்சிகளை சாடினார். எதிர்கட்சியினர் அமைத்துள்ள கலப்பட கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் வாரிசு அரசியலை வளர்ப்பதும், குடும்பத்தினரை பாதுகாப்பதுமே அவர்களின் திட்டம் என்றும் பிரதமர் எதிர்கட்சிகளை குற்றம் சாட்டினார். வரும் தலைமுறைக்காக சிறப்பான திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருவதாக கூறிய அவர் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைய இருப்பதாக தெரிவித்தார். இறுதியாக 10 சதவிகித இடஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

922 views

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

அத்திவரதர் உற்சவத்தின் 18வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து காட்சி தந்து வருகிறார்.

59 views

குறைந்த விலையில் பெட்ரோல் சேமிக்கும் இயந்திரம் - கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

30 views

சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...

அதில்12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் நாட்டு பணம் இருந்தது.

23 views

ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் காரில் கடத்தல் - இருவர் கைது

தங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் கார்த்திகேயனை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

35 views

தாய்,சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை : பள்ளி வேன் டிரைவர் கைது

மருத்துவமனைக்கு சென்ற தாய் மற்றும் 5 வயது மகளை கடத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

328 views

ரூ.1,101 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம் : விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ. 1,101 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.