தொடர் கொலை - குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 03:26 PM
காவல்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம் மலைப்பள்ளத்தில் , சென்னை கொட்டிவாக்கத்தை  சேர்ந்த கல்லூரி மாணவரின் உடல் மீட்கப்பட்டது. 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கண்ணன் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந் நிலையில் கொலையில் தொடர்புடையவர்கள் செங்கல்பட்டை  சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் மறைந்திருப்பது செல்போன் டவர் மூலமாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க ஆளில்லா குட்டி விமானம் மூலமாக காவல்துறையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

20 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

12 views

இந்து கடவுள்களை விமர்சித்த விவகாரம் : தம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பாரதிராஜா மனு

இந்து கடவுள்களை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.