போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய இளைஞர் - போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
பதிவு : பிப்ரவரி 10, 2019, 01:13 PM
சென்னை அருகே போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அருகே போதை பொருள் விற்பனை செய்த நைஜீரிய நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போதை பொருள் தடுப்பு போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்பொழுது ஒரு தனியார் பிரியாணி கடை அருகே நைஜீரிய  இளைஞர்  போதை பொருள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் இக்ச்சுகுவா என்ற நைஜீரிய நாட்டவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகைன் மற்றும் கேட்டமைன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இக்ச்சுகுவாவுக்கு கோவாவை சேர்ந்த போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர்  புழல் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1668 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5269 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

69 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

6 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

139 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

29 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

9 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

248 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.