வங்கிகளின் வாராக்கடனை வசூலிக்க 4 கொள்கைகள் - நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தகவல்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 10:43 AM
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நடப்பு நிதியாண்டில் 31 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, மக்களவையில் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நடப்பு நிதியாண்டில் 31 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா, மக்களவையில் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டின் மார்ச் இறுதி நிலவரப்படி இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 8 லட்சத்து 95 ஆயிரத்து 601 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான  முதல் 9 மாதங்களில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 31 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்து  8 லட்சத்து 64 ஆயிரத்து 433 கோடி ரூபாயாக உள்ளது. 

நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதத்தில்  8 லட்சத்து 75 ஆயிரத்து 619 கோடியாக இருந்த வாராக்கடன்,  டிசம்பர்  மாதத்தில் 8 லட்சத்து 64 ஆயிரத்து 433 கோடியாக குறைந்துள்ளது.

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால்  2015-16 ஆண்டு முதல் 2018 டிசம்பர் வரை 3 லட்சத்து  33 ஆயிரத்து 491 கோடி ரூபாய் வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.

வாராக்கடனை குறைக்கும் நடவடிக்கையாக,  அடையாளம் காணுதல், தீர்வு,  மறு முதலீடு, மறு கட்டமைப்பு என 4 வழிகளை கடைபிடித்து வருவதால் வாராக்கடன் மேம்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

637 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4118 views

பிற செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் நிலவரம் : பா.ஜ.கவிற்கு சற்று சரிவு?

மக்களவை தேர்தல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு கட்டமாக நடைபெற்று வருகிறது.

138 views

கால பைரவர் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வழிபாடு

23 views

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி...உயர்கல்வி படித்தும் வேலையில்லை...அதிர்ச்சி ஆய்வறிக்கை

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

39 views

வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

28 views

இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

56 views

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சன்னி தியோல்

இந்தி பட நடிகரான சன்னி தியோல் பாஜகவுல சேர்ந்த நிலையில அவருக்கு பஞ்சாப்ல போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கு.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.