சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விவகாரம் : சி.பி.ஐ. முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர்
பதிவு : பிப்ரவரி 09, 2019, 02:22 PM
சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று நேரில் ஆஜரானார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.  இதற்காக ராஜீவ்குமார் நேற்று மாலை ஷில்லாங் சென்றார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக 14 பேர் கொண்ட சிபிஜ அதிகாரிகள் குழுவும் ஷில்லாங் விரைந்தது. சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ராஜீவ் குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் தொடர்பான ஆவணங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டதாக கூறி அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற போது கொல்கத்தா போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து இவ்விவகாரம் பெரிதாகி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணா போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

69 views

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

94 views

திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.

517 views

பிற செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரி...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெ​ரிவித்துள்ளார்.

0 views

பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள்...

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.

101 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

12 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

74 views

"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.