71% நிதி செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியது தவறு - ஜாக்டோ ஜியோ
பதிவு : பிப்ரவரி 09, 2019, 05:31 AM
அரசின் மொத்த வருவாயில் 71 சதவீதத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது தவறு என, ஜாக்டோ ஜியோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக சுமார் 55 ஆயிரத்து நானூறு கோடியும், ஓய்வூதியமாக 29 ஆயிரத்து 627 கோடி ரூபாயும் செலவிடப்படுவதாகவும், இது அரசின் மொத்த வருவாயில் 40 புள்ளி 10 விழுக்காடு தொகை என்று குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். ஆனால், அரசின் வரி வருவாயில் 71 விழுக்காடு அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி அரசு விளம்பரம் வெளியிட்டது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு ஆராயப்பட்ட குழுவின் அறிக்கை, பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளதை வரவேற்பதாகவும் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

58 views

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

38 views

பிற செய்திகள்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

3 views

ஸ்டாலினுடன் ராஜ கண்ணப்பன் சந்திப்பு - "தி.மு.கவில் இணைவது எப்போது?"

தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

27 views

தி.மு.க.வின் வெற்றியை பறிக்க ஆட்சியாளர்கள் கணக்கு

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என உழைத்த அனைவருக்கும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.

133 views

கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

90 views

குடியுரிமை விவகாரம் - விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மூன்று மாத கைக்குழந்தையாக சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தவருக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 views

சர்ச்சை வீடியோ - 4 நாளில் பாய்ந்தது குண்டர் சட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டர்.

385 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.