கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 04:46 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.
உடுமலையில் சின்னத்தம்பி பதுங்கியிருந்த முள்காடு பகுதியை அதிகாரிகள் அழித்ததால், அங்கிருந்து மடத்துக்குளம் வழியாக அமராவதி ஆற்றை கடந்து, கண்ணாடிபுத்தூர் பகுதி கரும்பு காட்டில் சின்னதம்பி தஞ்சம் புகுந்தது. அங்கு, கரும்பு மற்றும் நெல் பயிற்களை மேய்ந்து விட்டு கரும்பு காட்டில் நேற்று மாலை வரை உறங்கியது. பின்னர்,  அருகிலிருந்த வாழை தோட்டத்தில் புகுந்து வாழையை ருசி பார்த்த சின்னத்தம்பி, நேற்று இரவு, அங்குள்ள தென்னந்தோப்பில் தஞ்சமடைந்துள்ளது. யானை செல்லும் இடமெல்லாம் பின் தொடரும் வனத் துறையினர், சரியான சந்தர்ப்பத்தில் அதை வனப்பகுதிக்கு அனுப்ப காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் இடங்களை மாற்றியபடி சுற்றித் திரியும் சின்னத்தம்பியின் செய்கையால், வனத்துறையினர் திகைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

158 views

கும்கி யானையுடன் விளையாடும் சின்னதம்பி...

வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.

3142 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

62 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

132 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

27 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

238 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.