திருப்பூருக்கு பிரதமர் மோடி 10 ஆம் தேதி வருகை...
பதிவு : பிப்ரவரி 09, 2019, 12:33 AM
அரசு முறைப்பயணமாக 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்சிக்களிலும் அதனைத் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவின் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் பல கட்ட சுற்றுப் பயணம் செய்ய உள்ளனர் . அரசு முறைப்பயணமாக 10 ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்சிக்களிலும் அதனைத் தொடர்ந்து பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். 12  ஆம்தேதி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நெல்லையிலும் 15 ஆம் தேதி மத்திய அமைச்சர்  நிதின்கட்கரி சென்னையிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் . பாஜக தேசிய தலைவர்அமித்ஷா வரும் 14 ஆம்  தேதி ஈரோட்டிலும் 22 ஆம் தேதி ராமேஸ்வரத்திலும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் இது தவிர 12ம்தேதி " எங்கள் குடும்பம் பாஜக குடும்பம்"  என  பாஜக தொண்டர்கள் தங்கள் வீட்டின் முன்  கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்கள் தங்கள்  வீட்டின் முன்பு தாமரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது . .அடுத்த மாதம் 2 ஆம் தேதி வாக்குச்சாவடி வாரியாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1000 இருசக்கர வாகனங்கள் என 2லட்சத்து 34ஆயிரம் இருசக்கர வாகன பேரணியையும்  தமிழகம் முழுவதும்  நடத்த பாஜக முடிவு செய்துள்ளது . 

தொடர்புடைய செய்திகள்

மோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...

தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

372 views

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

131 views

"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்" - பிரதமர் மோடி

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

530 views

சத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்

169 views

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

154 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

36 views

"கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

48 views

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

54 views

மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் - புதிய அமைப்பு துவக்கம்

மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.

124 views

"நாட்டைக் காக்கும் தியாகம் வீண் போகாது" - ஸ்டாலின்

நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.