ஒவ்வொரு தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 11:54 PM
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு.
மகாராஷ்டிராவில் செயல்பட்ட தலித் சிறுத்தைகள் என்ற இயக்கத்தின் தமிழக பிரிவின் தலைவர் மலைச்சாமி, 1989ம் ஆண்டு இறந்ததும், அந்த கட்சியின் அமைப்பாளரானார், திருமாவளவன். 1990ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியன்று மதுரையில் அந்த கட்சியின் பெயரை விடுதலை சிறுத்தைகள் என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலங்களில் தேர்தல் அரசியலை புறக்கணித்த இந்த கட்சி, முதன் முதலாக 1999 நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கியது. அந்த தேர்தலில், மூப்பனார் தலைமையிலான தமாகா உடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரத்தில் இரண்டே கால் லட்சம் வாக்குகளும், பெரம்பலூரில் 1 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தமிழகத்தில் 8 தொகுதியிலும் புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போட்டியிட்டது. கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார். 
அதன்பிறகு, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணியை உருவாக்கி, தமிழகத்தில் 8 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பின்னர், 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை திமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கைகோர்த்தது. 2006 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக அணியில் தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டு, மங்களூர் மற்றும் காட்டுமன்னார்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்றது. அதன்பிறகு, திமுக அணிக்கு மாறியதோடு 2009 நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக, சிதம்பரம் தொகுதியில் இருந்து எம்.பி.யாக திருமாவளவன் வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக அணியில் நீடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வியை தழுவியது. அடுத்த இரண்டே ஆண்டுகளில், திமுக அணியில் இருந்து விலகி, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தலுக்கு பிறகு மீண்டும் திமுக அணிக்கு திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது வரை அந்த அணியில் நீடித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி : ஸ்டாலின் நலம் விசாரிப்பு

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொது செயலாளர் அன்பழகனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

38 views

சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

96 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4970 views

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

477 views

சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா

சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உறுதியாகியுள்ளது.

5328 views

பிற செய்திகள்

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

58 views

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 views

"அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்" - பசவராஜ்

அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.

24 views

வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

24 views

பணப்பட்டுவாடா தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் - ஆர். எஸ். பாரதி

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.

24 views

தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது - மகேந்திரன்

பணப்பட்டுவாடா செய்யும் இடங்களில் சோதனை செய்யாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்களில் சோதனைச் செய்யப்படுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விமர்​சித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.