ஆரணி இளைஞர் தற்கொலை
பதிவு : பிப்ரவரி 08, 2019, 04:50 PM
ஆரணி இளைஞர் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ். இவரது மனைவிக்கும், இவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில், திடீரென ரமேஷ், 300 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த ஆரணி காவல்துறையினர், ரமேஷிடம் நான்கு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ரமேஷ் கீழே இறங்கி வர மறுத்துள்ளார். இதனையடுத்து, பாதுகாப்பிற்காக ஊர்மக்களை துணியை விரித்து பிடிக்குமாறு கூறிவிட்டு, தீயணைப்பு துறையினர் மின் கோபுரம் மீது ஏறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 5 மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத ரமேஷ் திடீரென மின் கோபுரத்தில் இருந்து குதித்தார். 

பிற செய்திகள்

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுகின்றனர் - ரவீந்திர சமரவீரா

மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரத்திற்கு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணலாம் என, இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரா தெரிவித்துள்ளார்.

7 views

அதிமுகவுக்கு எக்காலத்திலும் உரிமைகோர முடியாது - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் நான்கிலும், அதிமுக வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்

8 views

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

21 views

முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகல கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலையாள மக்களின் பாரம்பரிய முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.