கஞ்சா பதுக்கிவைத்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் கைது
பதிவு : பிப்ரவரி 07, 2019, 04:51 PM
கஞ்சா பதுக்கி வைத்து விட்டு கடத்தல்காரர்களை சுமார் 9 மணி நேரமாக போலீஸாருடன் இணைந்து தேடிய ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிடிபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த  196 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஆனால், கடத்தல்காரர் சிக்காததால், உளவுத்துறை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவர்களுடன் சேர்ந்து கடத்தல்காரரை தேடிய தோட்டத்தின் உரிமையாளர் ஜெயக்குமார் தான் கடத்தல்காரர் என தெரிந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். முத்துபேட்டை பகுதியில் வசித்து வரும் ஜெயகுமார்,  வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவரை உச்சிபுளி காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்ததை அவர் ஒத்துக்கொண்டார். இதையடுத்து, ஜெயகுமாரை கைது செய்த உச்சிபுளி போலீஸார் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2254 views

பிற செய்திகள்

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

6 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

கோயில் வாசலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் பகுதியில் பிறந்து சிலநாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு கிடந்தது.

314 views

மனைவியை வெட்டி கொலை செய்த காவலர் தூக்குப் போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த காவலர், தானும் தூக்லகுப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4384 views

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

34 views

இடிந்து விழுந்த அரசு கல்லூரி மாணவர் விடுதி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.