விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்ம மரணம்
பதிவு : பிப்ரவரி 05, 2019, 10:49 AM
நெல்லை மாவட்டம் குற்றாலம் விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குட்டகம் புளியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காதலியுடன் குற்றாலம் வந்த அவர் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் விடுதியில் அவர் மர்மமான முறையில் தூங்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாகமாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதில் இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.