நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை, பணம் திருட்டு - வேலைக்கார சிறுமியும், அவரது தாயும் கைது
பதிவு : பிப்ரவரி 02, 2019, 04:54 AM
நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக, வேலைக்கார சிறுமி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் குடும்பத்தினருடன் வசித்துவரும் நடிகை பானுப்பிரியா, தம்மை கொடுமைப்படுத்தியதாக, வேலைக்கார சிறுமி, ஆந்திரா போலீஸில் புகாரளித்தார். இதையடுத்து, தனது வீட்டில் நகை மற்றும் பணத்தை சிறுமி தரப்பு திருடி விட்டதாக நடிகை பானுப்பிரியா புகாரளித்தார். இதையடுத்து, ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது தாயார் ராஜியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, 15 சவரன் நகை ம​ற்றும், ஒன்றே கால் லட்ச ரூபாயை சிறுமி திருடியதும், அண்மையில் சிறுமியை பார்க்க வந்த ராஜி, அதை எடுத்துச் சென்றதும் அம்பலமானது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். வேலைக்கார சிறுமியை கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.