கஜா புயலால் பாதித்த மக்களுக்கு புதிதாக வீடு கட்டித்தரும் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள்
பதிவு : ஜனவரி 20, 2019, 12:03 AM
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்துள்ளனர். அங்குள்ள தண்டா குளத்துக்கரை கிராமத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்து 50 குடும்பங்கள், பரிதவித்து வந்ததை அறிந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த செலவில் வீடுகளை கட்டித்தரும் முயற்சியில் இறங்கினர். அதன்படி,  பத்து லட்ச ரூபாய் செலவில் மொத்தம் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  அதில் இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க அவர்கள் திட்டமிட்டுள்ள அவர்கள், அந்த கிராமத்து மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். ரசிகர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1668 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5269 views

பிற செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம்...

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

616 views

நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால்

சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ஒய். ஜி. மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

4 views

சீனாவில் ரஜினியின் 2.0 - செப்.6-ல் வெளியீடு : சமூக வலைதளத்தில் எமி ஜாக்சன் தகவல்

‌சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சீனாவில் திரையிடப்பட உள்ளது.

9 views

விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன் பட பாடல் காட்சி வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சங்கத் தமிழன்.

63 views

குற்றாலீஸ்வரனை சந்தித்த நடிகர் அஜித்

நடிகர் அஜித் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்து பேசிய நிலையில் இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

5746 views

பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் ஆக.30ஆம் தேதி ரிலீஸ்

பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.