கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்
பதிவு : ஜனவரி 18, 2019, 11:22 AM
கோவை மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டை ​தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டை அடுத்த அட்டமலா பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த நக்சல் இயக்கத்தினர் தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் எழுதிய நோட்டீஸ்களை அப்பகுதியில் ஒட்டி சென்றுள்ளனர். அதில் நாடுகாணி கொரில்லா படை ராணுவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கொரில்லா படை நக்சல்கள் கோவை மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என கேரள மாநில தண்டர் போல்ட் குழுவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தலைமையில் கடந்த 2 நாட்களாக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 30 நக்சலைட்டுகளின் புகைப்படம் அடங்கிய நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கிராமங்களுக்கு வந்தாலும், வனத்தில் பதுங்கியிருந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வன கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது

449 views

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

950 views

பயங்கரவாத சதி முறியடிப்பு : நாடு முழுவதும் தொடரும் கைது

நாடு முழுவதும் பல இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த போடப்பட்ட திட்டம் தொடர்பாக மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

56 views

பிற செய்திகள்

ஜிம்னாஸ்டிக் போட்டி : பார்வையாளர்களை கவர்ந்த சிறுவர்கள் நடனம்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறுவர்கள் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

1 views

இறைவனிடம் கோரிக்கை மனு அளித்த சிவனடியார்கள்

கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சிவனடியார்கள் இறைவனிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

6 views

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - நடிகர் ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

3 views

விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி

பெண்ணை விட காதலனுக்கு வயது குறைவு - பெற்றோர்கள் அனுமதி அளிக்காததால் முடிவு

56 views

கடைசி நிமிடத்தில் வெற்றியை தனதாக்கிய வீரர்

மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.

36 views

தீவிரவாத தாக்குதல் - நடிகர் சங்கம் கடும் கண்டனம்

உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.