காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்
பதிவு : ஜனவரி 17, 2019, 02:12 AM
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
சென்னை மெரினா கடற்கரை பாதுகாப்பு தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த  சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.   

கடலில்  குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனதாக குறிப்பிட்டார்.

கடற்கரைக்கு வரும் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை எழுதப்பட்ட அடையாள சீட்டு அவர்களது கையில் கட்டப்படும்.  

பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், 50 சிசிடிவி கேமராக்கள் , பறக்கும் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படும் என்றார்.

மாற்றுத் திறனாளிகள், முதியோர் கடற்கரை வரை செல்ல வாகன ஏற்பாடுகளும், பார்வை திறனற்றவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.  

கூட்டத்தில் இருக்கும் குற்றவாளிகளை கண்டறிவும், பழைய குற்றவாளிகளை அடையாள காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஆங்காங்கே பொருத்தியுள்ள எல்.இ.டி. டிவியில் காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு உள்ளிட்ட தகவல் மற்றும் எச்சரிக்கைகள் ஒளிப்பராகும் என்று இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

648 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3313 views

பிற செய்திகள்

அரசின் பசுமை வீட்டில் இயங்கிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

அரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

95 views

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

44 views

அழகம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

12 views

அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

709 views

முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு

காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

53 views

ஆந்திராவில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி : திருமாவளவன் அறிவிப்பு

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.