கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி
பதிவு : ஜனவரி 17, 2019, 12:35 AM
முறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.
முறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார். 

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மனைவி கார்த்திகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரண்டு குடும்பத்தினரும் கண்டித்த நிலையில் இருவரும் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் விஷம் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இதில் கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் சதீஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.