கவிதை பாடி, நட்பை வளர்த்த வாழ்த்து அட்டைகள்.. நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போன சோகம்..
பதிவு : ஜனவரி 14, 2019, 10:59 AM
தைத் திருநாளில் தூரத்து அன்பை சுமந்துவந்த வாழ்த்து அட்டைகள், தற்போதைய நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போனது சோகத்தின் உச்சம்.
மில்லினியம் இயர் என்று அழைக்கப்படும் 2000-மாவது ஆண்டுவரை கடிதப் போக்குவரத்து பல சுகங்களையும், மன சுமைகளையும் தாங்கிய ஒன்றாக இருந்தது. ஆனால், நவீன வரவான செல்போன்களால், குறைந்து போனது கடிதப் போக்குவரத்து. இதன் ஒரு பகுதியாகவே, தீபாவளி, பொங்கல் விழாக்களுக்கு தூரத்து உறவு மற்றும் நட்புகளிடம் இருந்து வந்துசேரும் கடிதங்கள் அற்றுப் போயின. 

தைப் பொங்கல் என்பது விடியல் தொடங்கி, அந்திப் பொழுதுவரை வயலில் உழைக்கும் உழவனுக்கும் காளைகளுக்கும் நன்றி சொல்லும் ஆதித் திருவிழா. அந்நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, மரபு காலம் தொட்ட கவிதை வரிகளை தாங்கி வரும் தூரத்து உறவுகளின் வாழ்த்து அட்டை, ஓராண்டு உழைப்பு தழும்பின் மீதான வருடல்.

குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இருக்கும் வாழ்த்து அட்டை, ஏர் கலப்பை உழவன், கடவுள் படம் பொறித்த அட்டைகள், பிடித்தமான நடிகர், நடிகைகளின் படம் தாங்கிய வாழ்த்துக் கவிதைகள் என உறவுகளின் வாழ்த்து அட்டைகள் ஏராளம். அத்தை, மாமா குழந்தைகள் இதன் மூலம் காதல் வளர்த்த காலம் அது. 

நவீனகால வரவான செல்போனில் பறக்கும் குறுஞ்செய்தி, இந்த வாழ்த்து மடல்களை முடங்கச் செய்ததில் வியப்பில்லை. இதனால் வாழ்த்து அட்டை தயாரிக்கும் தொழிலும் முடங்கியது. ஆனால், நீண்டநாள் பேசிக்கொள்ளாத  உறவுகளும், வாழ்த்துக் கடிதங்கள் மூலம் சமாதானம் அடைந்ததை நொடியில் தொடர்புகொள்ளும் நவீன செல்போனால் ஈடுசெய்யவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் புதியன ஒதுக்கி பழையன தொடர வேண்டும் என்பது அச்சகத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3378 views

பிற செய்திகள்

பொங்கல் அன்று இயங்கிய தனியார் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரத்தில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளி திறக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

5 views

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது - அர்ஜூன் சம்பத்

சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 views

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் - சிலைக்கு மரியாதை

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

6 views

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

76 views

கோவையில் களைகட்டிய பொங்கல் விழா - பாரம்பரிய வாத்திய கருவிகளை இசைத்து மக்கள் மகிழ்ச்சி

கோவையில், குதிரை வண்டி சவாரி, சண்டை சேவல், பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க நடனம் என பொங்கல் விழா களை கட்டியது

23 views

அரிவாளுடன் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்கள் - அடித்து விரட்டிய மக்கள்

மதுரை மாவட்டம் புதுப்பட்டியில் பட்டப்பகலில் கிராமத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளனர்.

412 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.