ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்த 18 வயது இளைஞர் : கையும் களவுமாக பிடித்த மத்திய அரசு ஊழியர்
பதிவு : ஜனவரி 14, 2019, 10:39 AM
திருவனந்தபுரம் கோரக்பூர் ராப்திநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் ஏறிய மத்திய அரசு ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவரிடம் தன்னை டிடிஆர் என அறிமுகம் செய்துகொண்ட நபர் ஒருவர் அவரது டிக்கெட்டுகளை பரசோதனை செய்ய வாங்கியுள்ளார். டிக்கெட்டுகளை வாங்கிய நபர் அடுத்த ரயில் பெட்டிக்கு செல்ல முயன்றதால், சந்தேகம் அடைந்த ஜெயச்சந்திரன், அவரிடம் டிடிஆர் அடையாள அட்டைகளை காண்பிக்கும் படி கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரும் சில ஆவணங்களை காண்பிக்க, அவை அனைத்தும் போலியானவை என்பதை உறுதி செய்த ஜெயச்சந்திரன், அவரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் சுதிர் என்பதும், விஷாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

19 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

34 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

96 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

669 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

802 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1181 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.