சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்...
பதிவு : ஜனவரி 14, 2019, 07:13 AM
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
சபரிமலையில் பக்தர்களுக்கு ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். அதன்படி, இன்று மாலை மகர ஜோதியாக, பொன்னம்பல மேட்டில் காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  மகரஜோதி தரிசனத்தையொட்டி, பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியையொட்டி, சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் - பம்பை இடையே இலவச பேருந்து வசதி துவங்க உள்ளதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். சபரிமலையில், நடைபெறும் மகரஜோதி தரிசன நிகழ்ச்சியை, தந்தி டி.வி. இன்று மாலை 4 மணி முதல் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்நிலையில், சபரிமலைக்கு பெண்கள் வந்ததாக வதந்தி ஏற்பட்டதால் பரபரப்பு கிளம்பியது. ஆனால், சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த திருநங்கைகள் என தெரியவந்ததும்  சகஜ நிலை திரும்பியது.

பிற செய்திகள்

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

9 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

9 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

81 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

57 views

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு : பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி

மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.