100 வயதை கடந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழா
பதிவு : ஜனவரி 14, 2019, 01:06 AM
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி, தனது கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி, தனது கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.  

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது அருகி, முதியவர் இல்லங்கள் அதிகரித்து வரும் நிலையில், 100 வயதை கடந்த மூதாட்டிக்கு தலைமுறைக் குழந்தைகள் ஒன்றாகக் கூடி பிறந்தநாள் கேக் ஊட்டியது, நவீன காலத்தின் நம்பமுடியாத உண்மை.
   
கோபி அருகேயுள்ள நன்செய்புளியம்பட்டியில் தமது 3 மகன்களுடன் வசித்து வருகிறார் மூதாட்டி ராமக்காள். ராணுவ வீரரான இவரது கணவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட, மகன்களே பாதுகாப்பு அரண். மகன்களின் 6 மகள்கள், 2 மகன்கள் என 8 பேரக் குழந்தைகளும் வேலை நிமித்தமாக சென்னை, கோவை, பெங்களூரு என வெளியூர் சென்றுவிட்டனர். எனினும், ராமக்காள் 100 வயதை கடந்த தகவல் அறிந்து பரவசமடைந்தனர். உடனடியாக சொந்த ஊர் திரும்பிய அவர்கள், மூதாட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

மாமியார் ராமக்காளுக்கு கேக் ஊட்டிய மருமகள்கள், முத்தமழை பொழிந்த கொள்ளுப் பேரக்குழந்தைகள், பலூன்களை பறக்கவிட்ட பேரன்கள் என பாட்டியை மையப்படுத்தி உறவுகள் ஒன்று சேர்ந்த நிகழ்வு, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.  

தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் வாழ்த்து மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளது, தாய் உள்ளிட்ட உறவுகளை ஒதுக்குவோர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

751 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4790 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6129 views

பிற செய்திகள்

திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்

திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது.

2 views

உதயநிதியின் வியர்வையை துடைத்தப்படி நின்ற வேட்பாளர்

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

547 views

திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

17 views

சத்தியமங்கலம் : கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

19 views

'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.

30 views

தாராபுரம் : 200 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - இருவரிடம் விசாரணை

தாராபுரம் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.