ஆட்டை திருடிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து...
பதிவு : ஜனவரி 13, 2019, 01:11 PM
மணப்பாறை அருகே, ஆட்டை திருடிச் சென்றவர்கள் பயணம் செய்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து தப்பிக்க முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டி வடதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர், சின்னப்பன்...திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் தனது ஆடுகளை சின்னப்பன் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் ஆட்டை பிடித்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஆளுக்கொரு வாகனத்தில் ஆட்டோவை துரத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கடத்தல்காரர்கள் ஆட்டோவை அதிவேகமாக இயக்கியுள்ளனர். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்டோவில் இருந்த மூன்று பேரில், ஒருவர் மது போதையில் இருந்ததால், அவர் கீழே விழுந்தார். இருவர் மட்டும் ஓட்டம் பிடித்தனர். அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி ஒருவர் தப்பித்து விட, இன்னொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3372 views

பிற செய்திகள்

தென் இந்திய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி : சென்னை தனியார் பல்கலை. அணி முதலிடம்

கல்லூரி மாணவிகள் பங்குபெறும் தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

1 views

திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

16 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

228 views

காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

10 views

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

144 views

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.