மேகதாது விவகாரம்: தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்ய மத்திய அரசு கோரிக்கை
பதிவு : ஜனவரி 12, 2019, 05:58 PM
மாற்றம் : ஜனவரி 12, 2019, 05:59 PM
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
* மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்களுடன் சுமூக தீர்வு எட்டப்பட்ட பிறகே இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் மனுவில் கூறியுள்ள மத்திய அரசு, எந்த ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு 
முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

* காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு வரும் வகையில் எந்த 
திட்டமும் கொண்டு வரப்பட மாட்டாது என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எனவே, மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

* எனினும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவிற்கு, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பயிர்கள் நாசம்

பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

221 views

ஆற்றில் மணல் அள்ளிய போது கிடைத்த 200 கிலோ நந்தி சிலை-ஆற்றில் தண்ணீர் வருவதால் மீண்டும் மூழ்கும் நிலை

திருச்சி மாவட்டம் திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிய போது 200 கிலோ எடையுள்ள நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.

139 views

பிற செய்திகள்

சபரிமலை விவகாரம்- "புதிய சட்டம் தேவை" - மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2 views

குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி

குஜராத்தில், விவசாயி ஒருவர் வெறும் பிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

338 views

மகளிர் பாதுகாப்புக்கு, ரயில்வே துறையின் செயலி... வீடியோ மூலம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

ஓடும் ரெயிலில், மகளிருக்கு பாதுகாப்பு தேவை குறித்து, விளக்கும் வகையில், புதிய வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

18 views

தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகம்

கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனத்துடன் கேரள அரசின் வேளாண்மை துறையும் இணைந்து தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

46 views

மனைவியின் தங்கைக்கு பாலியல் தொல்லை : அக்காள் கணவர் கைது

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பூபாலன் என்பவர் தனது மனைவி வரலட்சுமியின் தங்கை கவுரிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

337 views

திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்

திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.