ஆடல், பாடலுடன் களை கட்டிய பொங்கல் விழா
பதிவு : ஜனவரி 12, 2019, 05:51 PM
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த  மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். மாரியம்மன் கோயிலிலிருந்து டிரம்ஸ் இசைத்தபடி மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் சாலையில் நடனம் ஆடியபடியே சென்றனர்.  அதனை தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரி சார்பிலும்  மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அரசு ஆரம்ப பள்ளியில் பொங்கல் விழா :மாணவர்கள் பொங்கலிட்டு மகிழ்ச்சி


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் பொங்கல் விழாவை நடத்தி அசத்தியுள்ளனர். திர்ப்பதிசாரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த அரிசி மற்றும் கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுடன் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாணவர்கள் பங்கேற்று, இனிப்புகளையும் பறிமாறிக் கொண்டனர்.

தனியார் பள்ளியில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம் சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் பொங்கல் விழா வெகு உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .  மண்பானையில் பொங்கல் வைத்த மாணவிகள் பொங்கலோ பொங்கலோ  என்று கூறி,  கிராமிய ஆடல் பாடல்களுடன்  பொங்கலை  கொண்டாடி மகிழ்ந்தனர்.   இதனையடுத்து ஜல்லிக்கட்டு காளைகள் போல் வேடமணிந்தும், அதனை அடக்குவது போலவும் மாணவர்கள் அசத்தினர். 

கிராமிய பொழுது போக்கு அம்சங்களுடன் பொங்கல் விழாசேலத்தில் கிராமிய பொழுது போக்கு அம்சங்களுடன் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து உற்சாகமாக  கொண்டாடி மகிழ்ந்தனர். அம்மாப்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரி சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் மாணவிகள் பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர். இதனையடுத்து, பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினதூரி, மாட்டு வண்டி, பட்டம் விடுதல், போன்ற விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. 


தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5306 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

7 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

124 views

காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

7 views

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

106 views

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியீடு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின், பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, சென்னையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிடுகிறார்.

96 views

யானைகள் முகாமில் பொங்கல் விழா : சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்த யானைகள்

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் உள்ள 24 கும்கி யானைகளுக்கு பொங்கல் வழங்கும் விழா நடைபெற்றது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.