"ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்குமா ? "
பதிவு : ஜனவரி 11, 2019, 01:27 AM
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ஒரு கோடியே 90லட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த போதிலும், ஒரு கோடியே 90லட்சம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இவர்களுக்கு வருகிற 14 ம் தேதிக்குள் விநியோகிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம், சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத, அடையாளத்திற்கு மட்டுமே ரேஷன் கார்டு வாங்கியிருப்பவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க உத்தரவிடுமாறு,  அதிமுக வழக்கறிஞர் பால சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் முறையிட்டார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அறிவுறுத்தினர். இதனிடையே, அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்கும் வகையில், தமிழக அரசு, சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1276 views

பிற செய்திகள்

பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு...

பூந்தமல்லி அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

46 views

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

26 views

சாலையில் கிடந்த பணம் - காவல் ஆணையரிடம் ஒப்படைத்த முதியவர்

கோவை அருகே சாலையில் கிடந்த கை பர்சை முதிவயர் ஒருவர் காவல் ஆணையரிடம் வழங்கினார்.

20 views

வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் : மேள தாளம் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது

கோவை வடவள்ளி முல்லை நகரில் வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

11 views

இளைஞர் தற்கொலை வழக்கில் திருப்பம் : கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விடப்பட்டது அம்பலம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மகன் இறப்பில் சந்தேகம் என தந்தை கொடுத்த புகாரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

204 views

உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான நீர் இல்லை : ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்

உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.