ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் - நீதிமன்றம்
பதிவு : ஜனவரி 10, 2019, 03:32 PM
ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் - நீதிமன்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு பிரச்சினை தொடர்பான வழக்கு, இன்று மட்டும் 2-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனை கேட்டறிந்த உயர்நீதிமன்றம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஒரு ஆணையரை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த ஆணையர் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், ஆணையர் மற்றும் விழா குழுவினர் குறித்த விவரங்கள், பாதுகாப்பு மற்றும் இதர விவரங்கள் குறித்த விரிவான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமூகமாக நடத்த முன்வராவிட்டால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3378 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2921 views

பிற செய்திகள்

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.

1 views

மனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

11 views

வீரரின் கால் சட்டையை கழற்றிய இலங்கை அமைச்சர் காளை

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

66 views

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

15 views

உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

3 views

நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய திருவிழா

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் காணும் பொங்கல் கலை விழா நடைபெற்றது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.