பணத்தை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
பதிவு : ஜனவரி 10, 2019, 07:22 AM
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்காததை கண்டித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டோக்கன் அடிப்படையில் பரிசுப் பொருள் விநியோகம்

அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளதால், பொங்கல் பரிசு தொகை அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறியதுடன், பரிசுத் தொகை வாங்காமல் நகர மாட்டோம் என ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால்  சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பரிசாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரொக்கம் வழங்க நீதிமன்றம் விதித்த தடையால்  ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.  அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், அனைவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டன. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், நிறுத்தினால் இலவசங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

பொங்கல் பரிசு அபகரிப்பு - அதிகாரிகள் விசாரணை

வெளியூர் சென்றவரின் கையெழுத்தை போலியாக போட்டு பொங்கல் பரிசை பெற்ற சம்பவத்தில், உணவு வழங்கல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த சைமன் பீட்டர் என்பவர், மகன் படிப்புக்காக வெளியூரில் தங்கியுள்ள தமது குடும்பத்தைப் பார்க்க அடிக்கடி சென்றுவருவது வழக்கம். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில, அரசு வழங்கிய பொங்கல் பரிசு பெற்றதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், ஆய்வு நடத்தியதில் போலி கையெழுத்திட்டு பொங்கல் பரிசு மோசடி செய்யப்பட்டுள்ள அம்பலமானது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

எவருக்கும் ரூ 1,000 பொங்கல் பரிசு இல்லை - பொய் தகவலால் ரேசன் கடை முன்பு கூடிய பொதுமக்கள்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஒமலூர் அருகே பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்ற பொய் தகவல் பரவியது. இதனையடுத்து தாத்தியம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.ஒரே  நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் ரேஷன் கடையை பூட்டிவிட்டு சென்றனர். 

அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ 

பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்கப்படும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

100 views

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

137 views

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22 views

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

30 views

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்தும் திரளான பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

79 views

மக்களவை தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

540 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.