முத்ரா கடன் பெற்றவர்களில் பெண்கள் 75 % - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்
பதிவு : ஜனவரி 10, 2019, 01:24 AM
சிறு தொழில் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் 75 சதவீதம் பெண் தொழில்முனைவோர்கள் கடன் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
சிறு தொழில் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் மு​த்ரா கடன் வழங்கும் திட்டத்தில்  75 சதவீதம் பெண் தொழில்முனைவோர்கள் கடன் பெற்றுள்ளதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர்,  இத்திட்டத்தி​ல் இதுவரை 14 கோடி  பேர்  கடன் பெற்று உள்ளதாகவும், இதில் 75 சதவீதம் பேர் பெண்கள் என்றும், குறிப்பிட்டார். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். பெண்கள் முறைப்படுத்தப்பட்ட துறைக்குள் வருவது அதிகரித்து உள்ளதாகவும் கூறினார். இந்த திட்டம் மூலம் 10 லட்ச ரூபாய் வரை  சிறு தொழில்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிக்க சுகாதாரமான நீர் இல்லை : ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்

உலக அளவில் 220 கோடி பேருக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

9 views

ஜனவரி 12ஆம் தேதி 243 பேருடன் சென்ற தேவமாதா படகு மாயம் : கேரள போலீசார் விசாரணை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முனாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தேவமாதா என்ற பெரிய படகில் 243 பேர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

5 views

கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் : சதானந்த கவுடா கோரிக்கை

கர்நாடக விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா காவிரி மேலாண்மை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

6 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் : ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார்.

24 views

கர்நாடக அணைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது : காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன் குமார் கருத்து

கடந்த 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 1 புள்ளி 72 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் கூறினார்.

13 views

"மத ரீதியான கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து

மத ரீதியான கருத்துகளை சொல்ல மக்களவையில் அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.