பொங்கல் பரிசு ரொக்கம் யாருக்குக் கிடைக்கும் ?
பதிவு : ஜனவரி 10, 2019, 12:49 AM
மாற்றம் : ஜனவரி 10, 2019, 07:51 AM
பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிப்பதை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் யாருக்கு ரொக்கம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின்  உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் 76 லட்சத்து 99 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்குக் கிடைக்கும். 

மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35 கிலோ அரிசி உட்பட பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் வாங்கும் 18 லட்சத்து 64 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் கிடைக்க உள்ளது.

மாநில அரசின் நிதி உதவியுடன் மட்டும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கும் முன்னுரிமையற்ற 90 லட்சத்து 8 ஆயிரம் குடும்ப அட்டைகளும்   நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்  பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய்  ரொக்கம் பெற  தடை இல்லை என்று  தெரிய வந்துள்ளது.

மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து சர்க்கரை போன்றவை  வாங்கும்  முன்னுரிமையற்ற 10 லட்சத்து ஆயிரம்  குடும்ப அட்டைகளுக்குக் கிடைக்காது.

எப்பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற 41 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும்  ரொக்கம் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1271 views

பிற செய்திகள்

குடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

21 views

"24 மணி நேரமும் 1512 எண் இயங்கும்" - சைலேந்திரபாபு திட்டவட்டம்

ஒடும் ரெயிலில் மகளிருக்கு உதவி தேவைப்பட்டால், 24 மணி நேரமும் உதவ, போலீசார் தயாராக உள்ளதாக ரெயில்வே காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார்.

34 views

குடிநீருக்காக 4 கி.மீ., தூரம் நடக்கும் மக்கள் : சகதி கலந்த நீர் தான் கிடைப்பதாக வேதனை

கடலூர் அருகே விலங்கல் பட்டு கிராமத்தில் குடிநீருக்காக 4 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

20 views

விவசாய நிலத்தில் மணல் அள்ள அரசு அனுமதிப்பதா? : அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் மணல் அள்ள வந்த அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

8 views

மாந்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் : விவசாய பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

பழனியருகே மாந்தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

8 views

கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விடும் திட்டம் : கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராசிபுரம் அருகே கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.