பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது
பதிவு : ஜனவரி 10, 2019, 12:41 AM
மாற்றம் : ஜனவரி 10, 2019, 12:45 AM
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் விவாதம் முடிவடைந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இடஒதுக்கீடு அமல் : கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு கிடைக்கும்

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், இந்த இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும். இந்த மசோதாவின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும். இந்த இடஒதுக்கீட்டை பெற, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4723 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

67 views

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

37 views

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ஆம் தேதி வெளியிடப்படும் - தினகரன் தகவல்

22ஆம் தேதி அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிக்க உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்

212 views

"காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது" - ஓ.எஸ். மணியன்

அதிமுகவில் பரம்பரை அரசியல் உள்ளதாக சொல்வது தவறு என்றும், காங்கிரஸ்- தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

21 views

மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

254 views

"அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவேன்" - கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.