பாத யாத்திரையை நிறைவு செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி
பதிவு : ஜனவரி 09, 2019, 03:58 PM
ஆந்திரா​வில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
ஆந்திரா​வில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்களை சந்திக்கும் தனது நடை பயணத்தை தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டி, 13 மாதங்களில் ஆந்திராவில் உள்ள 134 தொகுதிகளுக்கு நடைபயணமாக சென்று 2 கோடி மக்களை சந்தித்த‌தாக தெரிவித்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரம் என்ற பகுதியில் இன்று தனது யாத்திரையை நிறைவு செய்தார். அங்கு ஜெகன்மோகன் ரெட்டிக்கு, உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள், செல்பி எடுத்தும் பரிசுகள் வழங்கியும் மகிழ்ந்தனர். இதன் மூலம், இந்தியாவிலே அதிக தூரம் நடை பயணம் சென்ற அரசியல் தலைவர் என்ற சாதனையை அவர் தனதாக்கி கொண்டுள்ளார். இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில், ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை தோற்கடிப்பதற்காக ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி, பிரம்மாண்ட நடைபயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3372 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

சி.பி.ஐ. புதிய இயக்குநர் யார்? : ஜன.24ல் முடிவு

புதிய சி.பி.ஐ. இயக்குநரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 24 ஆம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

15 views

அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

22 views

நெருப்பில் மாடுகளை ஓட வைத்து பொங்கல் பண்டிகை

கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

62 views

"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்

"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்

73 views

சபரிமலைக்கு செல்ல 2 பெண்கள் முயற்சி : தடுத்து நிறுத்தி பக்தர்கள் முழக்கம்

பக்தர்களின் எதிர்ப்பால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

961 views

ஐ.ஐ.டி. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

குடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு அபாயம் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.