அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கிளை எச்சரிக்கை
பதிவு : ஜனவரி 09, 2019, 01:38 PM
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை என சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், நிர்வாக ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி ஆணையர் அசோக் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி பொறுப்பு ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். 
 
அப்போது நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் அரசு மாறாது எனவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.  

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என கூறியதோடு  நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 
எச்சரித்து, வழக்கை வருகிற 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4725 views

பிற செய்திகள்

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

32 views

ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

11 views

மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

15 views

சென்னையில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது.

6 views

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

119 views

விபத்தில் சிக்கிய மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

விபத்தில் சிக்கிய 10 வகுப்பு மாணவர் படுத்தவாறே தேர்வு எழுதினார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.