குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
பதிவு : ஜனவரி 09, 2019, 01:30 PM
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர்,  தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.

இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று தெரிவித்தார். ஆனால், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி  வெளிநடப்பு செய்தனர். பின்னர், 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2417 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3729 views

பிற செய்திகள்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

23 views

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

34 views

"தேர்தலுக்காகவே நீரவ் மோடி கைது" - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம்

வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

36 views

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

56 views

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.

50 views

உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.