கோவில் பிரச்சினை : ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
பதிவு : ஜனவரி 09, 2019, 12:56 PM
ராசிபுரம் அருகே, கோவில் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பொன்பரப்பிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினம். 25 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இவர்களது குடும்பம், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. இவர்களிடம் யாரும் பேசக் கூடாது எனவும், கோவில் திருவிழா உள்ளிட்ட ஊர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலை, இன்றளவும் தொடர்வதால், ஊரை விட்டு வெளியே வந்த அவர்கள் அங்குள்ள மலைப் பகுதியில், முறையான வீடு இல்லாமல், திறந்த வெளியில், சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தினத்தின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். ரத்தினத்தின் மகன் லோகேஷ், அங்குள்ள கல்லூரி ஒன்றில், டிப்ளமோ படித்து வரும் நிலையில், தமது குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல்,  சக மாணவர்களுக்கு தெரிந்தததால், மன உளைச்சலில், கடந்த ஒரு மாதமாக அவர் கல்லூரிக்கு போகவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3438 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2975 views

பிற செய்திகள்

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.

33 views

முதலமைச்சருடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு : புயல் நிவாரணம் ரூ.14.06 லட்சம் வழங்கப்பட்டது

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக, ஆய்வு மையம் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

15 views

போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிரச்சனைக்கு தீர்வு

32 views

18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

60 views

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

19 views

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - 18 வயதான மீனவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்த மீனவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.