மதுவாங்க ரூ 25 தராததால் வெறிச்செய​ல் - தலையில் கல்லை போட்டு கொலை
பதிவு : ஜனவரி 09, 2019, 10:41 AM
மதுவாங்க 25 ரூபாய் பணம் தராத வெறியில், முன்பின் தெரியாதவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவாங்க 25 ரூபாய் பணம் தராத வெறியில், முன்பின் தெரியாதவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள முனியப்பன் கோயில் அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொல்லப்பட்டவர், துடியலூர் பகுதியில் பொக்லைன் ஆப்ரேட்டராக பணியாற்றிய ஆனந்தகுமார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

கடந்த 6ஆம் தேதி பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற ஆனந்தகுமாருக்கும், பன்னிமடை பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையும் போலீசார் கண்டறிந்தனர். 

உடனே அருண்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவலை அருண்குமார் வெளியிட்டிருக்கிறார். 

தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத ஆனந்தகுமாரிடம், அருண்குமார், மது வாங்க 25 ரூபாய் தருமாறு கேட்டிருக்கிறார். 

தன்னிடம் பணம் இல்லை என ஆனந்தகுமார் கூற இருவருக்கும் இடையே டாஸ்மாக் கடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

டாஸ்மாக் கடையில் இருந்து ஆனந்தகுமாரை பின்தொடர்ந்த அருண்குமார், ஆனந்தகுமாரை தாக்கி அவர் மீது கல்லை போட்டு கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

மது வாங்க 25 ரூபாய் பணம் தராத வெறியில், முன்பின் தெரியாதவரை ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1222 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4605 views

பிற செய்திகள்

யாகம் விஞ்ஞானம் சார்ந்தது என்று நம்புகிறேன் - மாஃபா பாண்டியராஜன்

யாகம் என்பது மதம் கடந்த நம்பிக்கை என்றும் மழை பெய்ய, யாகமும் முக்கிய காரணம் என்று நினைப்பதாகவும அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

27 views

நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு விசாரணை : போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

"மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அரசு கேட்பதில்லை" - மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

மாற்றுத்திறனாளி குறைகளை கேட்க அரசு துறை செயலாளர் மற்றும் ஆணையர் மறுத்து வருவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

9 views

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

24 views

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு18 ஆயிரம் பேர் விண்ணப்பம் - உடுமலை ராதாகிருஷ்ணன்

நடப்பாண்டில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

10 views

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் : கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கோவையில் முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.