எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் - நீதிபதிகள் கேள்வி
பதிவு : ஜனவரி 09, 2019, 01:16 AM
எய்ட்ஸ் கட்டுபாட்டு மையங்களில் உரிய கல்வித் தகுதியின்றி பணியாற்றுவோரை, பணிநீக்கம் செய்ய தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்க வேண்டும் என கூறியிருந்தார். 

மேலும் ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விபரங்களை பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித்தகுதி இல்லாத பணியாளர்களை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் சசிதரன்,  ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கல்வித்தகுதி இன்றி பணியாற்றுவோரை, பணியிலிருந்து நீக்க கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர். பின்னர்,  தமிழக சுகாதாரத்துறை செயலர் இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பு

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 13 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

120 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

151 views

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

177 views

பிற செய்திகள்

ஆட்சியர் எச்சரிக்கை - பெண் வி.ஏ.ஓ. பதில்...

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.

20 views

பழனி : மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

9 views

ஒசூர் : ஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள் - ஏரியில் ஆனந்த குளியல் போட்டு கும்மாளம்

ஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

30 views

"5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கூடாது" - ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

35 views

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

51 views

முத்தம்பட்டி அரசு பள்ளியில் யோகா தியான அறை திறப்பு

சேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.