காருடன் 380 சவரன் தங்க நகை கடத்தல்...
பதிவு : ஜனவரி 08, 2019, 04:15 PM
கோவையில் தங்க நகைகளுடன் சென்ற காரை கடத்திய கொள்ளையர்கள், மதுக்கரை அருகே காரை விட்டுவிட்டு தப்பித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மற்றொரு கிளைக்கு, கார் மூலம் 380 சவரன் நகை மற்றும் 243 கிராம் வெள்ளிப் பொருட்களை, ஊழியர்கள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். காக்காசாவடி அருகே வந்து கொண்டிருந்த போது, நகைகள் இருந்த காரின் பின்பகுதியில், திடீரென இரண்டு கார்கள் வந்து மோதின. இதனால் கார் நின்றது. பின்னர் அந்த கார்களில் இருந்து கீழே வந்த 10 பேர் கொண்ட கும்பல், நகைகள் இருந்த காரின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் காருக்குள் இருந்த இரண்டு ஊழியர்களை தாக்கி நகைகளுடன் காரையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்றது. கொள்ளையர்களை எட்டு தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் கடத்திச் சென்ற கார் மதுக்கரையில் உள்ள தென்றல் நகரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  நகைகளை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் காரை மட்டும் அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியுள்ளனர். கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தங்க நகை வியாபாரியை வழிமறித்து மந்திரம் ஓதுவதாக கூறி 52 சவரன் நகை கொள்ளை

நேற்றிரவு ஷரிபுல் ஹக் 52 சவரன் தங்க நகைகளை ஷாகிப்பிடம் கொடுத்து பாலீஷ் போட அனுப்பி வைத்தார்.

174 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

15 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

45 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.