பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் எலிமருந்தை சாப்பிட்டு 14 வயது சிறுவன் தற்கொலை
பதிவு : ஜனவரி 08, 2019, 01:02 PM
பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கததால் 9-ஆம் வகுப்பு மாணவன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கததால் 9-ஆம் வகுப்பு மாணவன் எலி மருந்து  சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்,  நெல்லூர் மாவட்டம்,  உதயகிரி மண்டலம் புள்ளையா பள்ளியை சேர்ந்த சீனிவாசலு, மௌனிகா தம்பதியின் ஒரே மகன் வெங்கடாத்ரி.

அங்குள்ள  அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை  பார்க்கும் தந்தையிடம் செல்போன் வாங்கித் தருமாறு வெங்கடாத்ரி தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். 

தற்போது பணம் இல்லை என்றும், விரைவில் வாங்கி கொடுக்கிறோம் என்றும் பெற்றோர் கூறி யிருக்கிறார்கள்.

ஆனால் சமாதானம் ஆகாத வெங்கடாத்ரி, கடந்த  சனிக்கிழமை தனது தாய் மற்றும் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். 

ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு வெங்கடாத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடாத்ரி திங்கள் கிழமை உயிரிழந்தார்.

செல்போனுக்காக ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

351 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5419 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

பணக்கார நாடுகள் பட்டியல் : 5 - வது இடத்தில் இந்தியா

அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2 - வது இடத்தை சீனா கைப்பற்றி உள்ளது. 3 - வது இடத்தை ஜப்பானும், 4 - வது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன.

4 views

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

24 views

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

6 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.