பாஜக நடத்திய கோவில் நிகழ்ச்சியில் மது விநியோகம்
பதிவு : ஜனவரி 08, 2019, 10:30 AM
உத்தர பிரதேசத்தில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, உணவு பொட்டலங்களுடன் மதுபாட்டில் மறைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தர பிரதேசத்தில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, உணவு பொட்டலங்களுடன் மதுபாட்டில் மறைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது
 
உத்தரபிரதேச மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நரேஷ் அகர்வாலின் மகன் நிதின், ஹர்தோய் நகரில் உள்ள ஷ்ரவன் தேவி கோவிலில், கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்தின் போது பேசிய நிதின், அனைவரும் மறக்காமல் உணவுப் பொட்டலத்தை வாங்கிச் செல்ல வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்தினார். இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பலரும் உணவுப் பொட்டலங்களை பெற்றுக் கொண்டனர். பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, உள்ளே உணவுடன், மது பாட்டில் ஒன்றும் இருந்தது. கூட்டத்தில் இருந்த சிறுவர்களுக்கும் மது பாட்டில் அடங்கிய உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டிருப்பதை அறிந்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. அன்ஷுல் வெர்மா, நிதினின்  நடவடிக்கை தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். மதுப்பாட்டில்களை கொடுத்த நிதின், எம்.எல்.ஏ-வாக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

9 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

9 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

81 views

கோவா அடுத்த முதல்வர் யார்...?

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் மனு

57 views

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவு : பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி

மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.