காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
பதிவு : ஜனவரி 08, 2019, 02:01 AM
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆட்சியில் இருந்த போது, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை, மத்திய அரசிதழில் வெளியிட தவற விட்டதாகவும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின், சட்டத்தின் மூலம் போராடி, அரசிதழில் வெளியிட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்த போது, மறுநாளே ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதாக கூறினார் ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக, மத்திய அரசிதழில் தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததாகவும், பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3397 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5330 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2931 views

பிற செய்திகள்

ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

35 views

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

13 views

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

16 views

திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்

திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

14 views

"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்."- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

12 views

50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.