தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள்
பதிவு : ஜனவரி 08, 2019, 01:53 AM
சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு பெரும்பாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு பெரும்பாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்படும் என்று
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மின்துறை அமைச்சர் தங்கமணி, உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேட, எதிர்க்கட்சிகள் முயலுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் 5- வது நாள் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகளும், அறிவிப்புகளும் இடம் பெற்றன.

" சாலையில் வசிப்போருக்கு அடுக்கு மாடி குடியிருப்பு" 

சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு பெரும்பாக்கத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்படும் என்று
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.

"பட்டாசு விவகாரம் : சிறப்பு பேரவை கூட்டம் தேவை" 

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக, சிறப்பு கூட்டத்தை கூட்டி,  தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

சிங்காநல்லூர் திமுக உறுப்பினர் கார்த்திக், புதை வட மின்கம்பிகள் அமைக்கும் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். 

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேட, எதிர்க்கட்சிகள் முயலுவதாக அப்போது, அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டினார். 

"ஜன. 10 -ல் துவக்கி வைக்கிறார், முதல்வர்"

நாட்டு கோழிகள் வளர்ப்பு திட்டத்தை வருகிற 10 ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைப்பார் என்று கால்நடைத்துறை அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ரேஷன் கார்டு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால், ரேஷன் கார்டு ரத்து என வெளியான செய்தியை, உணவு அமைச்சர் காமராஜ், திட்டவட்டமாக மறுத்தார். 

" ஆத்தூர் தனி மாவட்டம் : அரசு பரிசீலனை " 

ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து 
ஆய்வு செய்யு, உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேள்வி நேரத்தின்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

முத்திரைத்தாள்: புதிய சட்டமுன் வடிவு தாக்கல்

இதனிடையே, முத்திரைத்தாள் தொடர்பான நடைமுறையை ஒழுங்கு படுத்த வகை செய்யும் புதிய சட்ட முன்வடிவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பேரவையில் தாக்கல் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

593 views

பிற செய்திகள்

ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

26 views

திமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

13 views

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

15 views

திமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்

திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

14 views

"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்."- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

12 views

50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.