பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை - வழக்கு விபரம்
பதிவு : ஜனவரி 08, 2019, 01:06 AM
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு குறித்த விபரத்தை இப்போது பார்க்கலாம்...
ஒசூர் அருகே ஜி மங்கலம் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு சாராயம்  விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் பாகலூர் போலீசார் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பிற்கு எதிராகவும் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. 

இந்த சம்பவத்தில் பாகலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சேகர் என்ற ஏட்டு காயமடைந்தார். அதேபோல் ஜி.மங்கலத்திலிருந்து போலீசாரின் ஜீப்பை துரத்தி சென்ற போராட்டக்காரர்கள் பாகலூர் பகுதியில் அதற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் போலீசாருக்கு எதிராக செயல்பட்டு ஜீப்பை எரித்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதில் பாலகிருஷ்ண ரெட்டி 94 ஆவது நபராக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.எ.க்களை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2417 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3729 views

பிற செய்திகள்

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

77 views

ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

34 views

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

194 views

பிரதமரை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனுத்தாக்கல் - அய்யாகண்ணு

பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

92 views

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் - தங்க தமிழ்செல்வன்

சசிகலா சொன்னதால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

333 views

"அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள்" - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற மகளிர் அணியினர் பணியாற்ற, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.