பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது
பதிவு : ஜனவரி 07, 2019, 01:14 PM
சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவுடி சூர்யா மீது 6 கொலை உள்ளிட்ட 34 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர், கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார். ரவுடி சூர்யாவின் ஆட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, அவரைப் பிடிக்க சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில், தாம்பரம் பகுதியில் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்த சூர்யா மற்றும் அவனது கூட்டாளிகளை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்த துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

19 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

39 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

103 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

704 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

835 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1214 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.