சட்டப்பேரவையில் இன்று 07-01-2019
பதிவு : ஜனவரி 07, 2019, 12:25 PM
மாற்றம் : ஜனவரி 07, 2019, 02:45 PM
ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என பரவும் செய்தி குறித்து தமிழக அரசு விளக்குமாறு, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை கேள்வி எழுப்பினார்.
ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து ?


ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது என பரவும் செய்தி குறித்து தமிழக அரசு விளக்குமாறு,  சட்டப்பேரவையில் திமுக  சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், இன்றைய நிலையில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் என்பது சாதாரண விஷயம் என்றும், ரேஷன் கார்டு  வழங்குவதற்கு இதை கணக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் திட்டத்திற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும், அதற்கும், தமிழக அரசின் பொது விநியோக திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டார். அனைவருக்கும் பொது விநியோக திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

நாட்டுக்கோழிகள் வளர்ப்பு திட்டம் : 10ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

நாட்டுக்கோழிகள் வளர்ப்பு திட்டத்தை, வருகிற 10ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அனைத்து ஊராட்சிகளை உள்ளடக்கி கிராமப்புற ஏழைப் பெண்கள் 77 ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டு கோழி குஞ்சுகள் மற்றும் அவற்றை பாதுகாக்க ஏதுவாக 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய கூண்டுகளும் வழங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். 

புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி உறுதி 

தமிழகத்தில் உள்ள மாநகரங்களில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நிதி ஒதுக்கி, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதி உறுப்பினர் கார்த்திக் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஈரோடு மாநகராட்சியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். 

சாலையோரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு - துணை முதல்வர் பன்னீர்செல்வம் 

சென்னை துறைமுகம் தொகுதியில் ஏழை, எளிய மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, பெரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையில் துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சென்னையில் சாலை மற்றும் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1195 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4592 views

பிற செய்திகள்

பதவி ஏற்பதற்கு முன்பே புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வைத்தவர்கள் திமுக கூட்டணி எம்.பி.க்கள் - ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் தி.மு.க. சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர், ஆர்.டி. சீத்தாபதியின் திருவுருவப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து, மலர் அஞ்சலி செலுத்தினார்.

8 views

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

10 views

கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என, அடம்பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு, பா.ஜ.க. திரைமறைவில், ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரி​வித்துள்ளார்.

10 views

வரும் 28ஆம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28ஆம் தேதி அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறகிறது.

18 views

தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி

தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.

30 views

"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்

'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.